பத்துப்பாட்டு நூல்கள்

Monday, November 12, 2007

பத்துப்பாட்டு நூல்கள் - மலைபடுகடாம்

My other blogs
http:// pathupattu.blogspot.com
http:// ettuthogai.blogspot.com
http:// kizhkanakku.blogspot.com
http:// thirumalpur.blogspot.com

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடுகடாம்

திணை : பாடாண்
துறை : ஆற்றுப்படை
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்
அவர்கள் கடந்து வந்த மலை வழி
கடுக் கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், 15
எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி,
தொடுத்த வாளியர், துணை புணர் கானவர்,
இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கம்
அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது,
இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி- 20
பேரியாழின் இயல்பு
தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்;
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ, வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25
சிலம்பு அமை பந்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை;
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் 30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி;
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாவை, 35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்,
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்
அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப,
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு 40
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன,
துளங்கு இயல் மெலிந்த, கல் பொரு சீறடி,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,
விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து, 45
இலங்கு வளை, விறலியர் நிற்புறம் சுற்ற
கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்,
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி,
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! 50
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான, 55
புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்;
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை எர் உழவர்க்குப் 60
புது நிறை வந்த புனல் அம் சாயல்,
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி,
வில் நவில் தடக் கை, மே வரும் பெரும் பூண்,
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு,
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த 65
புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுகுதலின்
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்
ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்,
மலையும், சோலையும், மா புகல் கானமும்,
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப, 70
பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇ,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு,
தூத் துளி பொழிந்த பொய்யா வானின், 75
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து,
வல்லார் ஆயினும் புறம் மறைத்து, சென்றோரைச்
சொல்லிக் காட்டி, சோர்வு இன்றி விளக்கி,
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும், 80
நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்,
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும், 85
இகந்தன ஆயினும், தெவ்வர் தேஎம்
நுகம் படக் கடந்து, நூழிலாட்டி,
புரைத் தோல் வரைப்பின்வேல் நிழல் புலவோர்க்குக்
கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,
இரை தேர்ந்து இவரும் கொடுந் தாள் முதலையொடு 90
திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்,
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி,
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்,
கேள் இனி, வேளை நீ முன்னிய திசையே:
வழியினது நன்மையின் அளவு கூறுதல்
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின், 95
புகுவது வந்தன்று இது; அதன் பண்பே:
வானம் மின்னு வசிவு பொழிய, ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய,
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து,
அகல் இரு விசும்பின் ஆஅல் போல, 100
வாலின் விரிந்த புன் கொடி முசுண்டை;
நீலத்து அன்ன விதைப் புன மருங்கில்,
மகுளி பாயாது மலி துளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்,
கெளவை போகிய கருங் காய் பிடி ஏழ் 105
நெய் கொள ஒழுகின, பல் கவர் ஈர் எண்;
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப,
கொய் பதம் உற்றன, குலவுக் குரல் ஏனல்;
விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு, இருவிதொறும்,
குளிர் புரை கொடுங் காய் கொண்டன, அவரை; 110
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்,
வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி,
இரும்பு கவர்வுற்றன, பெரும் புன வரகே;
பால் வார்பு கெழீஇ, பல் கவர் வளி போழ்பு,
வாலிதின் விளைந்தன, ஐவன வெண்ணெல்; 115
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன,
கால் உறு துவைப்பின், கவிழ்க் கனைத்து, இறைஞ்சி,
குறை அறை வாரா நிவப்பின், அறை உற்று,
ஆலைக்கு அலமரும், தீம் கழைக் கரும்பே;
புயல் புனிறு போகிய, பூ மலி புறவின், 120
அவல் பதம் கொண்டன, அம் பொதித் தோரை;
தொய்யாது வித்திய துளர் படு துடவை
ஐயவி அமன்ற; வெண் கால் செறுவில்,
மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்;
செய்யாப் பாவை வளர்ந்து, கவின் முற்றி, 125
காயம் கொண்டன, இஞ்சி; மா இருந்து,
வயவுப் பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும்,
விழுமிதின் வீழ்ந்தன, கொழுங் கொடிக் கவலை;
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென,
ஊழ் மலர் ஒழி முகை உயர்முகம் தோய, 130
துறுகல் சுற்றிய சோலை வாழை,
இறுகு குலை முறுகப் பழுத்த; பயம் புக்கு
ஊழ் உற்று அலமரும், உந்தூழ்; அகல் அறை,
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்,
காலின் உதிர்ந்தன, கருங் கனி நாவல்; 135
மாறு கொள ஒழுகின, ஊறு நீர் உயவை;
நூறொடு குழீஇயின, கூவை; சேறு சிறந்து,
உண்ணுநர்த் தடுத்தன, தேமா; புண் அரிந்து,
அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி;
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப, 140
குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து,
கீழும் மேலும், கார் வாய்த்து எதிரி,
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி,
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே:
கானவர் குடியின் இயல்பு
தீயின் அன்ன ஒண் செய் காந்தள் 145
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,
அறியாது எடுத்த புன் புறச் சேவல்,
ஊஉன் அன்மையின், உண்ணாது உகுத்தென,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் 150
மண இல் கமழும் மா மலைச் சாரல்,
தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறு கண் பன்றிப் பழுதுளி போக்கி,
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக,
தூவொடு மலிந்த காய கானவர் 155
செழும் பல் யாணர்ச் சிறுகுடிப் படினே,
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து
அன்று, அவண் அசைஇ, அற் சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,
சேந்த செயலைச் செப்பம் போகி, 160
அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,
நோனாச் செறுவின் வலம் படு நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம் எனினே,
நும் இல் போல நில்லாது புக்கு, 165
கிழவிர் போலக் கேளாது கெழீஇ,
சேட் புலம்பு அகல் இனிய கூறி,
பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்
ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு, 170
வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல்
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து, வைகறை,
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர,
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்,
வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை, 175
முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை,
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ,
வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின்
இன் புளிக் கலந்து மா மோர் ஆக,
கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழ்த்து, 180
வழை அமை சாரல் கமழத் துழைஇ,
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி,
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,
மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர் 185
மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல்
செருச் செய் முன்பின் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப, நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலைமிசை நாடே
நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும்,
வரை அறை மகளிர் இருக்கை காணினும், 190
உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;
பல நாள் நில்லாது, நில நாடு படர்மின்
வழியின் அருமை எடுத்துரைத்தல்
பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும் எனல்
விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி,
புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர்
அரும் பொறி உடைய, ஆறே; நள் இருள் அலரி 195
விரிந்த விடியல், வைகினிர், கழிமின்
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை
நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்,
கரந்து, பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே;
குறிக் கொண்டு, மரம் கொட்டி, நோக்கி, 200
செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச,
வறிது நெறி ஒரீஇ, வலம் செயாக் கழிமின்
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்
புலந்து, புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர்நிலை இதணம் ஏறி, கை புடையூஉ,
அகன் மலை இறும்பில் துவன்றிய யானைப் 205
பகல் நிலை தவிர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்
இரு வெதிர் ஈர்ங் கழை தத்தி, கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன:
வரும், விசை தவிராது; மரம் மறையாக் கழிமின் 210
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்
உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர், அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பி, 215
பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி,
துருவின் அன்ன புன் தலை மகாரொடு.
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்
அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்,
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா, 220
வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்
உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, 225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,
ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்
பராவு அரு மரபின் கடவுள் காணின், 230
தொழா நிர் கழியின் அல்லது, வறிது.
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்
அலகை அன்ன வெள் வேர்ப் பீலிக்
கலக மஞ்ஞை கட்சியில் தளரினும்; 235
கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன,
நெடுங் கழைக் கொம்பர், கடுவன் உகளினும்;
நேர் கொள் நெடு வரை, நேமியின் தொடுத்த,
சூர் புகல் அடுக்கத்து, பிரசம் காணினும்,
ஞெரேரென நோக்கல், ஓம்புமின், உரித்தன்று; 240
நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர்
இரவில் குகைளில் தங்குதல்
வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவோடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,
நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின், 245
நெறிக் கெடக் கிடந்த, இரும் பிணர் எருத்தின்,
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முனி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது, இறாயினிர் மிசைந்து;
துகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர், 250
குவளை அம் பைஞ் சுனை, அசைவு விடப் பருகி;
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர்,
புள் கை போகிய புன் தலை மகாரொடு
அற்கு, இடை கழிதல் ஓம்பி, ஆற்ற, நும்
இல் புக்கன்ன, கல் அளை வதிமின் 255
விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்
அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயம் கண்டன்ன அகன் பை, அம்கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும், 260
துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி,
இகந்து சேண் கமழும் பூவும், உண்டோ ர்
மறந்து அமைகல்லாப் பழனும், ஊழ் இறந்து
பெரும் பயம் கழியினும், மாந்தர் துன்னார்
இருங் கால் வீயும், பெரு மரக் குழாமும்; 265
இடனும் வலனும் நினையினர் நோக்கி,
குறி அறிந்து, அவைஅவை குறுகாது கழிமின்:
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து,
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்
நாடு காண் நனந் தலை மென்மெல அகன்மின் 270
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்,
ஞாயிறு தெறாஅ மாக நனந் தலை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்,
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே, 275
அகன் கண் பாறைத் துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பி, நும் இயங்கள் தொடுமின்:
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்
பாடு இன் அருவிப் பயம் கெழு மீமிசை,
காடு காத்து உறையும் கானவர் உளரே;
நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் 280
புனல் படு பூசலின், விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும், கண்டோ ர்
மலைதற்கு இனிய பூவும், காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற,
நும்மின், நெஞ்சத்து அவலம் வீட, 285
இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்:
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு,
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு, புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து,
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின், 290
பல திறம் பெயர்பவை கேட்குவிர்மாதோ
மலையில் தோன்றம் பலவித ஒலிகளைக் கேட்டல்
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்,
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்,
அருவி நுகரும் வான்அர மகளிர்,
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், 295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்,
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்;
சேய் அளைப் பள்ளி, எஃகு உறு முள்ளின் 300
எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில்,
நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என,
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்;
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை 305
மலைமார், இடூஉம் ஏமப் பூசல்:
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; 310
கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி,
சிறுமை உற்ற களையாப் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, 315
நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக,
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சானம் என;
நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு 320
மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து 325
உரவுச் சினம் தணித்து, பெரு வெளில் பிணிமார்,
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்;
இனத்தின் தீர்ந்த துளங்கு இயில் நல் ஏறு, 330
மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை;
மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் 340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்;
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்;
என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, 345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்,
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலை படு கடாம் மாதிரத்து இயம்ப
நன்னனது மலை வழியில் செல்லும் வகை
குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்
முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் 350
விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே
கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்,
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக, நமக்கு எனத்
தொல் முறை மரபினிர் ஆகி, பல் மாண் 355
செரு மிக்குப் புகழும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட,
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி,
கைதொழூஉப் பரவி, பழிச்சினிர் கழிமின் 360
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி
மை படு மா மலை, பனுவலின் பொங்கி,
கை தோய்வு அன்ன கார் மழை, தொழுதி,
தூஉய் அன்ன துவலை துவற்றலின்,
தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு,
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல், 365
கூவல் அன்ன விடரகம் புகுமின்,
இருங் கல் இகுப்பத்து இறு வரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்,
மண் கனை முழவின்தலை, கோல், கொண்டு 370
தண்டு கால் ஆக, தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின்; ஊறு தவப் பலவே:
அயில் காய்ந்தன்ன கூர்ங் கல் பாறை,
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து,
கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் 375
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்
உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்,
அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய;
பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,
முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் 380
இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பி,
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்,
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே; 385
ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, 390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்
பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்
செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த 395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை,
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே:
தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, 400
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே;
அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின்
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்
புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி,
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, 405
சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின்,
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளை ஆன் தீம் பால், மிளை சூழ் கோவலர்,
வளையோர் உவப்ப, தருவனர் சொரிதலின், 410
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல, புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன,
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ,
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415
பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி,
தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின் 420
நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்
கொடு விற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை,
கொடியோள் கணவல் படர்ந்திகும் எனினே,
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ, 425
ஓம்புநர் அல்லது, உடற்றுநர் இல்லை;
ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்
தேம் பட மலர்ந்த அராஅ மெல் இணரும்,
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, 430
திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென,
உண்டனிர், ஆடி, கொண்டனிர் கழிமின்
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்
செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன,
வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த, 435
சுவல் விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ்,
அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;
பொன் எறிந்து அறைந்தன்ன நுண் நேர் அரிசி 440
வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை,
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன,
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை: 445
நொய்ம் மர விறகின் ஞெகிழ் மாட்டி,
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி,
புலரி விடியல் புள் ஓர்த்துத் கழிமின்
நன்னனது தண் பணை நாட்டின் தன்னை
புல் அரைக் காஞ்சி, புனல் பொரு புதவின்,
மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல் யாழ்ப் 450
பண்ணுப் பெயர்த்தன்ன, காவும், பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,
நன் பல உடைத்து, அவன் தண் பணை நாடே:
உழவர் செய்யும் உபசாரம்
கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,
வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை, 455
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்,
பிடிக் கை அன்ன, செங் கண் வராஅல்,
துடிக் கண் அன்ன. குறையொடு விரைஇ,
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்,
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த, 460
விலங்கல் அன்ன, போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்க,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்,
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும், பெறுகுவிர்;
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு, 465
'வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி கான்ம்' எனக்
கண்டோ ர் மருள, கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி, அசையினிர், கழிமின் 470
சேயாற்றின் கரைவழியே செல்லுதல்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
செங் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்,
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,
துனை செலல் தலைவாய், ஓவு இறந்து வரிக்கும், 475
காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்
நன்னனது மூதூரின் இயல்பு
நிதியம் துஞ்சும், நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதி எழல் அறியாப் பழங் குடி கெழீஇ,
வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமித்து, 480
யாறு எனக் கிடந்த தெருவின், சாறு என,
இகழுநர் வெரூஉம், கவலை மறுகின்,
கடல் என, கார் என, ஒலிக்கும் சும்மையொடு,
மலை என, மழை என, மாடம் ஓங்கி,
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும், 485
பனி வார் காவின் பல் வண்டு இமிரும்,
நனி சேய்த்தன்று, அவன் பழ விறல் மூதூர்
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்
பொருந்தாத் தெவ்வர் இருந் தலை துமிய,
பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர்
கருங் கடை எஃகம் சாத்திய புதவின், 490
அருங் கடி வாயில் அயிராது புகுமின்:
மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர்,
வெல் போர்ச் சேஎய்ப் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற, அளியர் தாம் என,
கண்டோ ர் எல்லாம், அமர்ந்து, இனிதின் நோக்கி, 495
விருந்து இறை அவர் அவர் எதிர் கொளக் குறுகி,
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்
எரி கான்றன்ன பூஞ் சினை மராஅத்து,
தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான், கயமுனிக் குழவி, 500
ஊமை எண்கின் குடாவடிக் குரளை,
மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந்தாள்
வரை வாழ் வருடை வன் தலை மாத்தகர்,
அரவுக் குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை,
அளைச் செறி உழுவை கோள் உறவெறுத்த 505
மடக் கண் மரையான் பெருஞ் செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின்,
பரல் தவழ் உடும்பின் கொடுந் தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை,
கானக்கோழி கவர் குரல் சேவல், 510
கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம்,
இடிக் கலப்பு அன்ன, நறு வடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம்,
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி,
காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை, 515
பரூஉப் பளிங்கு உதிர்த்த, பல உறு திரு மணி,
குரூஉப் புலி பொருத புண் கூர் யானை
முத்துடை மருப்பின் முழு வலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம், 520
கருங் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசுங் கறி,
திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்,
கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென, நெடு வரை,
நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல், 525
உடம்புணர்பு, தழீஇய ஆசினி, அனைத்தும்,
குட மலைப் பிறந்த தண் பெருங் காவிரி
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,
நோனாச் செருவின் நெடுங் கடைத் துவன்றி
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்
வானத்து அன்ன வளம் மலி யானை, 530
தாது எருத் ததைந்த, முற்றம் முன்னி,
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப,
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ்
நரம்பு மீது இறவாது, உடன் புணர்ந்து ஒன்றி, 535
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,
அருந் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்
விருந்தின் பாணி கழிப்பி, நீள் மொழிக்
குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல், 540
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும், பெரியோர் மாய்ந்தென,
கொடைக்கடன் இறுத்த செம்மலோய் என,
வென்றிப் பல் புகழ் விறலோடு ஏத்தி,
சென்றது நொடியவும் விடாஅன், 545
நன்னன் கூறும் முகமன் உரை
நசைதர
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என,
நாள் ஓலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து,
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி,
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ,
நன்னனது குளிர்ந்த நோக்கம்
உயர்ந்த கட்டில், உரும்பு இல் சுற்றத்து, 550
அகன்ற தாயத்து, அஃகிய நுட்பத்து,
இலம் என மலர்ந்த கையர் ஆகி,
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்,
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக்
கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று 555
வடு வாழ் எக்கர் மணலினும், பலரே;
அதனால், புகழொடும் கழிக, நம் வரைந்த நாள்! என,
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,
நயந்தனிர் சென்ற நும்மினும், தான் பெரிது,
உவந்த உள்ளமொடு, அமர்ந்து இனிது நோக்கி, 560
நன்னனது கொடைச் சிறப்பு
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந் நிணத் தடியொடு,
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,
தலை நாள் அன்ன புகலொடு, வழி சிறந்து 565
பல நாள் நிற்பினும், பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல, எம் தொல் பதிப் பெயர்ந்து! என,
மெல்லெனக் கூறி விடுப்பின், நும்முள்
தலைவன் தாமரை மலைய, விறலியர்
சீர் கெழு சிறப்பின் விளங்குஇழை அணிய, 570
நீர் இயக்கன்ன நிரை செலல் நெடுந் தேர்,
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,
பொலம் படைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நிலம் தினக் கிடந்த நிதியமோடு, அனைத்தும், 575
இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய,
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின்
வளம் பிழைப்பு அறியாது, வாய் வளம் பழுநி,
கழை வளர் நவிர்த்து மீமிசை, ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி, 580
தலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடுகிழவோனே.
தனிப் பாடல்
தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்?
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு!

பத்துப்பாட்டு நூல்கள் - குறிஞ்சிப் பாட்டு

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு



திணை : குறிஞ்சி
பாவகை : ஆசிரியப்பா
தோழி அறத்தொடு நிற்றல்
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், 5
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், 10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின்,
தலைவியின் அன்பு மிகுதி
முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை,
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்,
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின், 15
மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை,
எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்:
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி, 20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என,
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ ?
ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று, 25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்
மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல்
இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்;
கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், 30
வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின்; சினவாது ஈமோ!
தினைப்புனம் காத்த வகை
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை, 35
முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப,
துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி,
எல் பட வருதியர் என, நீ விடுத்தலின்,
கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த 40
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண,
சாரல் சூரல் தகை பெற வலத்த,
தழலும் தட்டையும் குளிரும், பிறவும்,
கிளி கடி மரபின, ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து 45
சுனையில் நீராடல்
விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு,
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, 50
இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்,
மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென,
அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர்,
அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி, 55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி,
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளி படு சிலம்பில், பாயும் பாடி,
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி, 60
உள்ளகம் சிவந்த கண்ணேம்
பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்
வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.
தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்
புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்,
வள் உயிர்த் தெள் விளி இடைஇடைப் பயிற்றி, 100
கிள்ளை ஒப்பியும், கிளை இதழ் பறியா,
பை விரி அல்குல் கொய்தழை தைஇ.
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை, எம்
மெல் இரு முச்சி, கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் 105
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
தலைவனது வருகை
எண்ணெய் நீவிய, சுரி வளர் நறுங் காழ்,
தண் நறுந் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந் தொடையல், வெண் போழ்க் கண்ணி, 115
நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி,
பைங் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப, சாந்து அருந்தி, 120
மைந்து இறை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற, வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரி வில் ஏந்தி, அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, 125
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல் வரும் தோறும் திருந்து அடிக் கலாவ
தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்
பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின்
உரவுச் சினம் செருக்கி, துன்னுதொறும் வெகுளும், 130
முளை வாள் எயிற்ற, வள் உகிர, ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம் எழுந்து, நல் அடி தளர்ந்து, யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர
தலைவன் மகளிரிடம் கெடுதி வினாதல்
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து 135
ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்
அலமரல், ஆயிடை, வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மே வரக் கிளந்து, எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, ஒண் தொடி,
அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி, 140
மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன் அதன் எதிர்
சொல்லேம் ஆதலின், அல்லாந்து
தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்
கலங்கிக்
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு
சொல்லலும் பழியோ, மெல் இயலீர்? என, 145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த,
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, 150
கல்லென் சுற்றக் கடுங் குரல் அவித்து, எம்
சொல்லல் பாணி நின்றனன் ஆக
யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை
இருவி வேய்ந்த குறுங் காற் குரம்பை,
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம் பிழி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, 155
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து,
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ், அம் சிலை கொளீஇ, நோய் மிக்கு,
உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கி,
கணை விடு(பு), புடையூ, கானம் கல்லென, 160
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர,
கார்ப் பெயல் உருமின் பிளிறி, சீர்த் தக
இரும் பிணர்த் தடக் கை இரு நிலம் சேர்த்தி,
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு,
மையல் வேழம், மடங்கலின், எதிரதர, 165
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென,
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி,
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க
யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்
வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி, கடு விசை, 170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர,
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,
அயர்ந்து புறங்கொடுத்து பின்னர்
நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை
நெடு வேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப, 175
திணி நிலைக் கடம்பின் திரள அரை வளைஇய
துணை அறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை
அடும் கரை வாழையின் நடுங்க, பெருந்தகை
அம் சில் ஓதி! அசையல்; யாவதும் 180
அஞ்சல், ஓம்பு நின்; அணி நலம் நுகர்கு என,
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்
தலைவி தலைவனுடன் கூடிய நிலை
அந் நிலை,
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ 185
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், 190
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் கிளம் நந்தி,
அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்,
வரைஅர மகளிரின் சாஅய், விழைதக, 195
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய், நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல்,
இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, 200
சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா, வள நகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உண,
பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, 210
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து,
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி,
எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி, 215
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய
மாலைக் காலத்தின் வருகை
மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ, 220
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப்
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயர, கானவர் 225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ 230
தலைவன் பெயர்நத நிலை
நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர,
நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள்
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்! என,
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து, 235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்,
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்
தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்
அதற் கொண்டு,
அன்றை அன்ன விருப்போடு, என்றும்,
இர வரல் மாலையனே; வருதோறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 240
நீ துயில் ஒழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்,
பெறாஅன்; பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர் 245
மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்,
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய், 250
நினைத்தொறும் கலுழுமால், இவளே
இரவில் தலைவன் வரும் வழியின் அருமை
கங்குல்,
அளைச் செறி உழவையும், ஆளியும், உளியமும்,
புழற் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ் சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ் சுழி வழங்கும்
கொடுந் தாள் முதலையும், இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர் 260
குழு மலை விடரகம், உடையவால் எனவே.
தனிப் பாடல்கள்
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்;
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்
தெரியுங்கால், தீயது இலன். 1
ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப்
போற்றிப் புனைந்த பொருளிற்றே-தேற்ற
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்
குறையாக் குறிஞ்சிக் குணம். 2

பத்துப்பாட்டு நூல்கள் - மதுரைக் காஞ்சி

தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி



இயற்கை வளம்
ஓங்குதிரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக,
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப, 5
வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்,
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்க, 10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த,
செயற்கைச் செழிப்பு நிலை
நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக, மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு 15
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து,
உண்டு தண்டா மிகு வளத்தான்,
உயர் பூரிம விழுத் தெருவில்,
பொய் அறியா, வாய்மொழியால்
புகழ் நிறைந்த, நல் மாந்தரொடு 20
நல் ஊழி அடிப் படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!
அகத்தியரின் வழிவந்த சான்றோன்
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர் 25
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சு வந்த போர்க்களத்தான்,
ஆண் தலை அணங்கு அடுப்பின்,
வய வேந்தர் ஒண் குருதி 30
சினத் தீயின் பெயர்பு பொங்க,
தெறல் அருங் கடுந் துப்பின்,
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்,
தொடித் தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு, 35
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் 40
தொள் முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்
நால் வகைப் படைகளின் வலிமை
விழுச் சூழிய, விளங்கு ஓடைய,
கடுஞ் சினத்த, கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய, 45
வரை மருளும் உயர் தோன்றல,
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும் 50
வாம் பரிய கடுந் திண் தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
நெடியோனின் போர்த் திறமை
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் 55
பொருது, அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி, 60
பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்!
மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை
அருங் குழு மிளை, குண்டு கிடங்கின்,
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின், 65
நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உமிழ், அயில், அருப்பம்
தண்டாது தலைச் சென்று,
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல் 70
குண குட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை
கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
வான் இயைந்த இரு முந்நீர்ப் 75
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து,
கொடும் புணரி விலங்கு போழ,
கடுங் காலொடு, கரை சேர,
நெடுங் கொடி மிசை, இதை எடுத்து,
இன் இசைய முரசம் முழங்க, 80
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெரு நாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை, 85
தெண் கடல் குண்டு அகழி,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!
குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர்
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் இசை, ஏற்றத் 90
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்,
கயன், அகைய வயல் நிறைக்கும்,
மென் தொடை வன் கிழாஅர்,
அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி,
இரும் புள் ஓப்பும் இசையே என்றும், 95
மணிப்பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப,
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்
ஒரு சார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு,
உரு கெழு பெருஞ் சிறப்பின் 100
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! 105
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை, அரிநர் கம்பலை, 110
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே, என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து,
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நனித் தூவல், 115
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை,
இருங் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலி யாணர்
முதுவெள்ளிலை
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங் கானத்தில் பகைவர்களை வென்றமை
மீக்கூறும்,
வியல் மேவல் விழுச் செல்வத்து, 120
இரு வகையான், இசை சான்ற,
சிறுகுடிப் பெருந் தொழுவர்,
குடி கெழீஇய நால் நிலவரொடு,
தொன்று மொழிந்து, தொழில் கேட்ப
கால் என்னக் கடிது உராஅய், 125
நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே! 130
கொற்கைக்குத் தலைவன்
நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்,
விளைந்து முதிர்ந்த விழு முத்தின், 135
இலங்கு வளை, இருஞ் சேரி,
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து,
நல் கொற்கையோர் நசைப் பொருந!
செழியன் பரதவரை வென்றமை
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின், 140
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!
பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி
அரிய எல்லாம் எளிதினின் கொண்டு, 145
உரிய எல்லாம் ஓம்பாது வீசி,
நனி புகன்று உறைதும் என்னாது, ஏற்று எழுந்து,
பனி வார் சிமையக் கானம் போகி,
அக நாடு புக்கு, அவர் அருப்பம் வெளவி,
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து, 150
மேம்பட மரீஇய வெல் போர்க் குருசில்!
பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை
உறு செறுநர் புலம் புக்கு, அவர்
கடி காவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய, 155
நாடு எனும் பேர் காடு ஆக,
ஆ சேந்த வழி மா சேப்ப,
ஊர் இருந்த வழி பாழ் ஆக,
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, 160
அவை இருந்த பெரும் பொதியில்,
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பு ஆட,
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின், 165
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ,
கொழும் பதிய குடி தேம்பிச்
செழுங் கேளிர் நிழல் சேர,
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரல, 170
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை,
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று, ஊர்தர,
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பல் மயிர்ப் பிணவொடு கேழல் உகள,
வாழாமையின் வழி தவக் கெட்டு, 175
பாழ் ஆயின, நின் பகைவர் தேஎம்.
பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்
எழாஅத் தோள் இமிழ் முழக்கின்,
மாஅத் தாள், உயர் மருப்பின்,
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் தானையொடு 180
முருகு உறழப் பகைத்தலைச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ,
பெயல் உறழக் கணை சிதறி,
பல புரவி நீறு உகைப்ப,
வளை நரல, வயிர் ஆர்ப்ப, 185
பீடு அழியக் கடந்து அட்டு, அவர்
நாடு அழிய எயில் வெளவி,
சுற்றமொடு தூ அறுத்தலின்,
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப,
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி, 190
அரசியல் பிழையாது அற நெறி காட்டி,
பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது,
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழி வழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்!
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் 195
தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம்!
செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்
உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழுங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும், 200
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும்,
பழி நமக்கு எழுக என்னாய், விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே 205
அன்னாய்! நின்னொடு, முன்னிலை, எவனோ?
கொன் ஒன்று கிளக்குவல், அடு போர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!
கெடாது நிலைஇயர், இன் சேண் விளங்கு நல் இசை!
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
தவாப் பெருக்கத்து அறா யாணர், 210
அழித்து ஆனாக் கொழுந் திற்றி
இழித்து, ஆனாப் பல சொன்றி,
உண்டு, ஆனாக் கூர் நறவில்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப் 215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறுங் கைக் குறுந் தொடி செறிப்ப
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ, 220
மறம் கலங்கத் தலைச் சென்று,
வாள் உழந்து, அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின், 225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்,
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக,
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப,
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார், 230
பருந்து புறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படு கண் முரசம் காலை இயம்ப,
வெடி படக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த,
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த் 235
திரை இடு மணலினும் பலரே, உரைசெல
மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே!
மருத நில வளப்பம்
வலைஞர் இயல்பு
அதனால், குண கடல் கொண்டு குட கடல் முற்றி,
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி, 240
கவலை அம் குழம்பின் அருவி ஒலிப்ப,
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து,
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின், தாங்காது,
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி 245
நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி,
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முள் தாள சுடர்த் தாமரை,
கள் கமழும் நறு நெய்தல், 250
வள் இதழ் அவிழ் நீலம்,
மெல் இலை அரி ஆம்பலொடு,
வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கை
கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி, வய மீன் முகந்து, 255
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழப் பழனத்து நூழிலாட்டு,
கரும்பின் எந்திரம், கட்பின், ஓதை
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே, 260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன் கை வினைஞர் அரிபறை, இன் குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை, ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலியப் 265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்,
அகல் இரு வானத்து இமிழ்ந்து, இனிது இசைப்ப,
குருகு நரல, மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு,
மருதம் சான்ற தண் பணை சுற்றி, ஒரு சார் 270
முல்லை நிலக் காட்சிகள்
சிறு தினை கொய்ய, கவ்வை கறுப்ப,
கருங் கால் வரகின் இருங் குரல் புலர,
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர,
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப
பெருங் கவின் பெற்ற சிறு தலை நெளவி 275
மடக் கண் பிணையொடு மறுகுவன உகள,
சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல்,
பாஅயன்ன பாறை அணிந்து,
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை தொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து, 280
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
மணி மருள் நெய்தல், உறழ, காமர்
துணி நீர் மெல் அவல், தொய்யிலொடு மலர,
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப,
முல்லை சான்ற புறவு அணிந்து, ஒரு சார் 285
குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்
நறுங் காழ் கொன்று, கோட்டின் வித்திய
குறுங் கதிர்த் தோரை, நெடுங் கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி, மஞ்சள், பைங்கறி, பிறவும்,
பல் வேறு தாரமொடு, கல்லகத்து ஈண்டி 290
தினை விளை சாரல் கிளி கடி பூசல்,
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்,
சேணோன் அகழ்ந்த மடி வாய்ப் பயம்பின்
வீழ் முகக் கேழல் அட்ட பூசல், 295
கருங் கால் வேங்கை இருஞ் சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல், இருங் கேழ்
ஏறு அடு வயப் புலிப் பூசலொடு, அனைத்தும்,
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட,
கருங் கால குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து, 300
அருங்கடி மா மலை தழீஇ, ஒரு சார்
பாலை நில இயல்பு
இரு வெதிர்ப் பைந் தூறு கூர் எரி நைப்ப,
நிழத்த யானை மேய் புலம் படர,
கலித்த இயவர் இயம் தொட்டன்ன,
கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து, 305
அருவி ஆன்ற அணி இல் மா மலை,
வை கண்டன்ன புல் முளி அம் காட்டு,
கமஞ் சூழ் கோடை விடரகம் முகந்து,
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி, 310
உவலைக் கண்ணி, வன் சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து,
பாலை சான்ற, சுரம் சேர்ந்து, ஒரு சார்
நெய்தல் நில இயல்பு
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம், 315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை,
பரதர் தந்த பல் வேறு கூலம்,
இருங் கழிச் செறுவின், தீம் புளி, வெள் உப்பு,
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக் கண் துணியல், 320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந் தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார்,
புணர்ந்து, உடன் கொணர்ந்த புரவியொடு, அனைத்தும்,
வைகல்தோறும் வழிவழிச் சிறப்ப,
நெய்தல் சான்ற வளம் பல பயின்று, ஆங்கு, 325
ஐம் பால் திணையும் கவினி அமை வர
மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்
பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்
முழவு இமிழும், அகல் ஆங்கண்,
விழவு நின்ற வியல் மறுகின்,
துணங்கை, அம் தழூஉவின், மணம் கமழ் சேரி,
இன் கலி யாணர், குழூஉப் பல பயின்று, ஆங்கு, 330
பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்
பெரும் பாணர் வாழும் இருக்கை
கலை தாய, உயர் சிமையத்து,
மயில் அகவும், மலி பொங்கர்,
மந்தி ஆட, மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின், 335
இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு மணல்
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்,
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்,
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்,
அவிர் அறல், வையைத் துறை துறை தோறும் 340
பல் வேறு பூத் திரள் தண்டலை சுற்றி,
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்
அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும், 345
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்,
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த,
அண்ணல் யானை, அடு போர் வேந்தர்
இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழிய,
பல் மாறு ஓட்டி, பெயர் புறம் பெற்று, 350
மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்,
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,
தொல் வலி நிலைஇய, அணங்குடை நெடு நிலை,
நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு, 355
வையை அன்ன வழக்குடை வாயில்,
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
பேரொலியும் பல் வகைக் கொடிகளும்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப, 360
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை,
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமித்து, 365
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல் கொடி,
வேறு பல் பெயர் ஆர் எயில் கொளக் கொள,
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி,
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப் படக் கொன்று, மிடை தோல் ஓட்டி, 370
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி,
கள்ளின் களி நவில் கொடியொடு, நன் பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ,
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க
நால் வகைப் படைகளின் இயக்கம்
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின், 375
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இடை புடையூ,
கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து உடன்
கடுங் காற்று எடுப்ப, கல் பொருது உரைஇ,
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, சினம் சிறந்து, 380
கோலோர்க் கொன்று, மேலோர் வீசி,
மென் பிணி வன் தொடர் பேணாது, காழ் சாய்த்து,
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய, வளி போழ்ந்து,
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் 385
செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன,
குரூஉ மயிர்ப் புரவி உராலின், பரி நிமிர்ந்து,
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்,
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய, 390
கொடி படு சுவல விடு மயிர்ப் புரவியும்
வேழத்து அன்ன வெரு வரு செலவின்,
கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்
அரியவும் பெரியவும், வருவன பெயர்தலின்
நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்
தீம் புழல் வல்சிக் கழல் கால் மழவர் 395
பூந் தலை முழவின் நோன் தலை கடுப்ப,
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்,
பல வகை விரித்த எதிர் பூங் கோதையர்,
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங் காய், 400
நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்,
இரு தலை வந்த பகை முனை கடுப்ப,
இன் உயிர் அஞ்சி, இன்னா வெய்து உயிர்த்து,
ஏங்குவனர் இருந்து, அவை நீங்கிய பின்றை,
பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர், 405
மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்
இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்,
நன்னர் நலத்தர், தொல் முது பெண்டிர்
செந் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை 410
செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன
செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,
ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று
வார்ந்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை, 415
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை,
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்,
மயில் இயலோரும், மட மொழியோரும்,
கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப, 420
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக
திருவிழாக் காட்சிகள்
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போல, 425
கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி,
ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்,
நாள்அங்காடி நனந் தலைக் கம்பலை. 430
செல்வர்கள் செல்லும் நிலை
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன, சிவந்து நுணங்கு உருவின்,
கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்,
பொன் புனை வாளொடு பொலியக் கட்டி,
திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை, 435
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி,
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல்,
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங் கோதை,
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ, 440
காலோர் காப்ப, கால் எனக் கழியும்
வான வண் கை வளம் கெழு செல்வர்
நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்
நாள் மகிழ் இருக்கை காண்மார், பூணொடு
தெள் அரிப் பொன் சிலம்பு ஒலிப்ப, ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை, 445
அணங்கு வீழ்வு அன்ன, பூந் தொடி மகளிர்,
மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ,
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்,
தெண் கடல் திரையின், அசைவளி புடைப்ப, 450
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்,
மழை மாய் மதியின், தோன்றுபு மறைய
கோயில்களில் அந்தி விழா
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக, 455
மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,
அந்தி விழவில் தூரியம் கறங்க 460
பெளத்தப் பள்ளி
திண் கதிர் மதாணி, ஒண் குறுமாக்களை,
ஓம்பினர்த் தழீஇ, தாம் புணர்ந்து முயங்கி,
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு,
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேர் இளம் பெண்டிர், 465
பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
அந்தணர் பள்ளி
சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி, 470
உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின்,
பெரியோர் மேஎய், இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்
அமணப் பள்ளி
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் 475
பூவும் புகையும் சாவகர் பழிச்ச,
சென்ற காலமும், வரூஉம் அமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்,
சான்ற கொள்கை, சாயா யாக்கை, 480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர், நோன்மார்,
கல் பொளிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி, நல்கு வர,
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து,
செம்பு இயன்றன்ன செஞ் சுவர் புனைந்து, 485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து, ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற
அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து, 490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
காவிதி மாக்கள்
நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து,
ஆவுதி மண்ணி, அவிர் துகில் முடித்து,
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல, 495
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழி ஒரீஇ உயர்ந்து, பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
பண்டங்கள் விற்கும் வணிகர்
அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி, 500
குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்,
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும், நிலத்தவும், நீரவும், பிறவும்,
பல் வேறு திரு மணி, முத்தமொடு, பொன் கொண்டு, 505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
நாற் பெருங் குழு
மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்,
பழையன், மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங் குழுவும் 510
பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம்
கோடு போழ் கடைநரும், திரு மணி குயினரும்,
குடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,
பொன்னுரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
செம்பு நிறை கொண்மரும், வம்பு நிறை முடிநரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும், 515
எவ் வகைச் செய்தியும் உவமம் காட்டி,
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும், பிறரும், கூடி,
தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண் பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து, 520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
நால் வேறு தெருவினும், கால் உற நிற்றர
பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்
கொடும் பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்,
தண் கடல் நாடன், ஒண் பூங் கோதை
பெரு நாள் இருக்கை, விழுமியோர் குழீஇ, 525
விழைவு கொள் கம்பலை கடுப்ப
உணவு வகைகள்
பலவுடன்,
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறு படக் கவினிய தேம் மாங் கனியும்,
பல் வேறு உருவின் காயும், பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி, 530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்,
புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு, பிறவும்,
இன் சோறு தருநர் பல் வயின் நுகர 535
அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்,
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
நனந் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக,
பெருங் கடல் குட்டத்துப் புலவுத் திரை ஓதம் 540
இருங் கழி மருவிப் பாய, பெரிது எழுந்து,
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்றே,
அல்அங்காடி அழி தரு கம்பலை.
இரவுக் கால நிலை
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க, சினம் தணிந்து, 545
சென்ற ஞாயிறு, நன் பகல் கொண்டு,
குடமுதல் குன்றம் சேர, குணமுதல்,
நாள் முதிர் மதியம் தோன்றி, நிலா விரிபு,
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
காதல் இன் துணை புணர்மார், ஆய் இதழ்த் 550
தண் நறுங் கழுநீர் துணைப்ப, இழை புனையூஉ,
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைய,
நரந்தம் அரைப்ப, நறுஞ் சாந்து மறுக,
மென் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப,
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் 555
நெடுஞ் சுடர் விளக்கம் கொளீஇ, நெடு நகர்
எல்லை எல்லாம், நோயொடு புகுந்து,
கல்லென் மாலை, நீங்க
குல மகளிர் செயல்
நாணுக் கொள,
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ்,
தாழ் பெயல் கனை குரல் கடுப்ப, பண்ணுப் பெயர்த்து, 560
வீழ் துணை தழீஇ, வியல் விசும்பு கமழ,
வரைவின் மகளிரின் ஒப்பனைச் சிறப்பு
நீர் திரண்டன்ன கோதை பிறக்க இட்டு,
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ,
மே தகு தகைய மிகு நலம் எய்தி, 565
பெரும் பல் குவளைச் சுரும்பு படு பல் மலர்,
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து,
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து,
வரைவின் மகளிரின் பொய் முயக்கம்
நுண் பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய் பல கூட்டி, கவவுக் கரந்து, 570
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி,
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்,
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப, இன் துயில் துறந்து, 575
பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல,
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல் இல்,
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி, 580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான, கண்டோ ர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
வரைவின் மகளிரின் வாழ்க்கை
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப் 585
பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர
ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் 590
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி, 595
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்
கணவர் உவப்ப, புதல்வர்ப் பயந்து, 600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற,
புலவுப் புனிறு தீர்ந்து, பொலிந்த சுற்றமொடு,
வள மனை மகளிர் குளநீர் அயர
சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605
நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப 610
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்
ஒரு சார்,
அருங் கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக் கூடு இன் இயம் கறங்க, நேர் நிறுத்து,
கார் மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்
சீர் மிகு நெடு வேள் பேணி, தழூஉப் பிணையூஉ,
மன்றுதொறும் நின்ற குரவை 615
இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்
சேரிதொறும்,
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு,
முந்தை யாமம் சென்ற பின்றை 620
இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை
பணிலம் கலி அவிந்து அடங்க, காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங் கடை அடைத்து, மட மதர்,
ஒள் இழை, மகளிர் பள்ளி அயர,
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை,
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் 625
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக் கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப 630
மூன்றாம் சாம் நிகழ்ச்சிகள்
பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய் கோல்
கூற்றக் கொல் தேர், கழுதொடு கொட்ப,
இரும் பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு,
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் 635
தொடலை வாளர், தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி,
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்,
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல் மாண் சுற்றினர், 640
நிலன் அகழ் உளியர், கலன் நசைஇக் கொட்கும்,
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப் புலி போல,
துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர்,
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த 645
நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர், ஊக்கருங் கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்,
அசைவிலர் எழுந்து, நயம் வந்து வழங்கலின், 650
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்,
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி
விடியல்காலத்தில் மதுரை மாநகர்
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு, 655
ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட, 660
பல் வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்ப,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பணித் துஞ்சி,
புலர்ந்து விரி விடியல் எய்த, விரும்பி,
கண் பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய, 665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி,
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற,
சூதர் வாழ்த்த, மாகதர் நுவல, 670
வேதாளிகரொடு, நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய, அணி மயில் அகவ, 675
பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக்
கூட்டு உறை வய மாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்,
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி, நறவு மகிழ்ந்து,
மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த 680
பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன,
அம் மென் குரும்பைக் காய் படுபு, பிறவும்,
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ் செம்மலொடு நன் கலம் சீப்ப, 685
இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை
மதுரையின் சிறப்பு
மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை,
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி, 690
காய் சின முன்பின் கடுங் கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல் எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக் கலம், அனைத்தும், 695
கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர,
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை
சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ 700
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப, மே தகப் பொலிந்து, 705
மயில் ஓரன்ன சாயல், மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர்ப் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர், கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்,
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் 710
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து,
ஆய் தொடி மகளிர் நறுந் தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி
காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்,
வரிக் கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந் தெரியல்,
பொலம் செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக் கைத் தொடியொடு சுடர் வர, 720
சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்,
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
வரு புனல் கல் சிறை கடுப்ப, இடை அறுத்து, 725
ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த
சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
வில்லைக் கவைஇக், கணைதாங்க மார்பின்
மா தாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய்க் கிடங்கின 730
நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது போர்த்த
மாக் கண் முரசம் ஓவு இல கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்,
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய, 735
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந் தும்பை,
நீர் யார்? என்னாது, முறை கருதுபு சூட்டி,
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து, 740
வானத்து அன்ன வள நகர் பொற்ப,
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்,
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந் தெரியல் 745
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
மன்னனது பெருங் கொடை
வரையா வாயில் செறாஅது இருந்து,
பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக! என 750
இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி
பற்றற்ற செயல் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
களம்தோறும் கள் அரிப்ப,
மரம்தோறும் மை வீழ்ப்ப,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய, 755
நெய் கனிந்து வறை ஆர்ப்ப,
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா, வியல் நகரால்,
பல் சாலை முது குடுமியின்,
நல் வேள்வித் துறை போகிய 760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும், சால்பும், செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி, 765
அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்று இசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பல் மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து, இனிது விளங்கி, 770
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாக,
கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர்,
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப,
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த 775
மறம் மிகு சிறப்பின் குறு நில மன்னர்
அவரும், பிறரும், துவன்றி,
பொற்பு விளங்கு புகழ் அவை நிற் புகழ்ந்து ஏத்த,
இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும் 780
மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே!
தனிப் பாடல்கள்
பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை, -அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ். 1
சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால், -மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் நாமம் அன்றே மலையாத
தண் தாரான் கூடல் தமிழ்? 2

பத்துப்பாட்டு நூல்கள் - முல்லைப் பாட்டு

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றிய முல்லைப் பாட்டு


கார் பருவத்தின் வருகை
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,
பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப
நல்ல வாய்ப்புகள்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15
இன்னே வருகுவர், தாயர் என்போள்
பெருமுது பெண்டிரின் தேற்ற மொழிகள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20
பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப
பாசறை அமைப்பு
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி
பாசறையின் உள் அமைப்பு - யானைப் பாகரின் செயல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35
கல்லா இளைஞர், கவளம் கைப்ப
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40
பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,
அரசனுக்கு அமைத்த பாசறை
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,
மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,
click here
மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப
வன்கண் யவனர்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
பாசறையின் கண் வேந்தன் மனநிலை
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து
பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, 80
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின
click here
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்
வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப,
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100
அரசனது தேரின் வருகை
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.
தனிப் பாடல்கள்
வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை? 1
புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்! 2

பத்துப்பாட்டு நூல்கள் - நெடுநல்வாடை

பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை


கோவலர் வாடையால் துன்புறுதல்
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,
புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் 5
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன்
கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க
கூதிர்க் கால நிலை
மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழ, கறவை 10
கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
ஊரினது செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,
பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர;
பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி, 15
இருங் கனி பரந்த ஈர வெண் மணல்,
செவ் வரி நாரையொடு, எவ் வாயும் கவர
கயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப; 20
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க;
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை,
நுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு, 25
தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற;
நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், 30
படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து,
இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர 35
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து, 40
அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர
click here
கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
மனை உறை புறவின் செங் கால் சேவல் 45
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி, கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப;
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்,
கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக; 50
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப;
கூந்தல், மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, 55
இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப,
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி,
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க;
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின், 60
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப;
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65
பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர;
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,
கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப; 70
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து,
கூதிர் நின்றன்றால்
அரண்மனை அமைப்பு - மனை வகுத்த முறை
போதே, மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75
நூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து-
கோபுர வாயில்
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,
பரு இரும்பு பிணித்து, செவ்வர்க்கு உரீஇ, 80
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு,
நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து,
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின்,
கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து, 85
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை,
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில்,
முற்றமும் முன்வாயிலும்
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, 90
நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை,
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணி நிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு,
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, 95
கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறைய,
கவிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் 100
click here
அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி,
அறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணி,
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க; 105
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,
ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின்,
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, 110
மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ்,
செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர்,
உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ,
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், 115
இகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல்,
பொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்
கூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் 120
புடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு,
உள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்
கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
மடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு,
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து, 125
புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து,
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து, 130
மெல்லிதின் விரிந்த சேக்கை
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
மேம்பட,
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய், அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை, 135
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழ, துணை துறந்து,
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென, குறுங் கண்
வாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின், 140
பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை,
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து,
செவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்து,
பூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல், 145
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்
click here
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
தளிர் ஏர் மேனி, தாய சுணங்கின்,
அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை,
வம்வு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின், 150
மெல் இயல் மகளிர்-நல் அடி வருட;
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல் பயிற்றி,
இன்னே வருகுவர் இன் துணையோர் என, 155
உகத்தவை மொழியவும்
தலைவியின் வருத்த மிகுதி
ஒல்லாள், மிகக் கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்,
ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி,
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை,
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, 160
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி,
செவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா, 165
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிகதில் அம்ம
பாசறையில் அரசன் நிலை
மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள, 170
களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி,
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல்
பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல, 175
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்,
மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப, 180
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால்யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, 185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.
தனிப் பாடல்
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?

பத்துப்பாட்டு நூல்கள் - பட்டினப் பாலை

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப் பாலை


காவிரியின் சிறப்பு
வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
சோழ நாட்டின் சிறப்பு
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின், கவின் வாடி, 10
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி,
கூட்டு நிழல், துயில் வதியும் 15
கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து, 20
சுடர் நுதல், மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,
நகரச் சிறப்பு
குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, 30
பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை, கலி யாணர்ப்,
பொழில் புறவின் பூந்தண்டலை,
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண் மீன் 35
உரு கெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர், வான் பொய்கை,
இரு காமத்து இணை ஏரி,
புலிப் பொறிப் போர்க் கதவின் 40
திருத் துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி, 45
ஏறு பொரச் சேறாகி,
தேர் ஓடத் துகள் கெழுமி,
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்; 50
தண் கேணித் தகை முற்றத்து,
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளி; தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் 55
மா இரும் பெடையோடு இரியல் போகி,
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்,
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
மக்களின் விளையாட்டுக்கள்
முது மரத்த முரண் களரி;
வரி மணல் அகன் திட்டை, 60
இருங் கிளை, இனன் ஒக்கல்,
கருந் தொழில், கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும் 65
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, 70
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்,
புள் இரியும் புகர்ப் போந்தை;
பறழ்ப் பன்றி, பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச் சேரி,
மேழகத் தகரொடு சிவல் விளையாட
கடற்கரையில் பகல் விளையாட்டு
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடு கல்லின் அரண் போல,
நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய 80
குறுங் கூரைக் குடி நாப்பண்;
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்;
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர், 85
சினைச் சுறவின் கோடு நட்டு,
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்;
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்;
புன் தலை இரும் பரதவர் 90
பைந் தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து, உண்டு ஆடியும்;
புலவு மணல், பூங் கானல்,
மா மலை அணைந்த கொண்மூப் போலவும், 95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்,
தீது நீங்க, கடல் ஆடியும்;
மாசு போக, புனல் படிந்தும்; 100
அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்;
பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்;
அகலாக் காதலொடு பகல் விளையாடி-
இரவில் துயிலும் நிலை
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை, 105
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், 110
நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி,
கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான், 115
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூ எக்கர்த் துயில் மடிந்து
ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
வால் இணர் மடல் தாழை
வேல் ஆழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும் 120
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறை படாது 125
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங் கடிப் பெருங் காப்பின்,
வலியுடை வல் அணங்கின் நோன்
புலி பொறித்து, புறம் போக்கி, 135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் எறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போல,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
குறுந் தொடை நெடும் படிக்கால்
கொடுந் திண்ணை, பல் தகைப்பின்,
புழை, வாயில், போகு இடைகழி,
மழை தோயும் உயர் மாடத்து 145
சேவடி, செறி குறங்கின்,
பாசிழை, பகட்டு அல்குல்,
தூசு உடை, துகிர் மேனி,
மயில் இயல், மான் நோக்கின்,
கிளி மழலை, மென் சாயலோர் 150
வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,
செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய், 155
குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து
பலவகைக் கொடிகளின் காட்சி
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; 160
வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல,
கூழுடைக் கொழு மஞ்சிகை,
தாழுடைத் தண் பணியத்து,
வால் அரிசிப் பலி சிதறி, 165
பாகு உகுத்த, பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்;
பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் 170
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்;
வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; 175
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ, மலர் சிதறி,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு; 180
பிற பிறவும் நனி விரைஇ,
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்
வளம் பல நிறைந்த தெருக்கள்
செல்லா நல் இசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185
காலின் வந்த கருங் கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும், 190
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
வணிகர்களின் வாழ்க்கை முறை
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி, 195
கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர்ப் பேணியும், ஆவுதி அருந்தியும், 200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான் மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை,
கொடு மேழி நசை உழவர் 205
நெடு நுகத்துப் பகல் போல,
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி, வாய் மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது, 210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி, துவன்று இருக்கை
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
தலைவனது அவல நிலை
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
வாரேன்; வாழிய, நெஞ்சே!
திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
கூர் உகிர்க் 220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு,
பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி;
அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று,
பெருங் கை யானை பிடி புக்காங்கு,
நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் 225
செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,
உரு கெழு தாயம் ஊழின் எய்தி
பகைவர்மேல் போருக்கு எழுதல்
பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்,
முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள், 230
உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை,
வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ,
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு,
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி, 235
பேய்க் கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி,
தலை தவச் சென்று
பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
தண்பணை எடுப்பி,
வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, 240
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி,
செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்; 245
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி, 250
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையும்;
அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில்
முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந் தொடை ஓர்க்கும்
பெரு விழாக் கழிந்த, பேஎம் முதிர், மன்றத்து, 255
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல் வாய் ஓரி அஞ்சு வரக் கதிர்ப்பவும்;
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்;
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ,
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்; 260
கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி,
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து,
பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்,
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ, 265
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து,
வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்;
அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய,
பெரு பாழ் செய்தும் அமையான்
திருமாவளவனது ஆற்றல்
மருங்கு அற 270
மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே;
வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன் என,
தான் முன்னிய துறைபோகலின்,
பல் ஒளியர் பணியு ஒழுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப, 275
வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி, 280
புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோ வேள் மருங்கு சாய
சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
காடு கொன்று நாடு ஆக்கி,
குளம் தொட்டு வளம் பெருக்கி,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி, 285
கோயிலொடு குடி நிறீஇ,
வாயிலொடு புழை அமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇ,
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது, 290
திரு நிலைஇய பெரு மன் எயில்,
மின் ஒளி எறிப்பத் தம் ஒளி மழுங்கி,
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும், 295
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,
செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன்
தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்
தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய, கானம்; அவன் 300
கோலினும் தண்ணிய, தட மென் தோளே!
தனிப் பாடல்
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று.

பத்துப்பாட்டு நூல்கள் - பெரும்பாண் ஆற்றுப்படை

தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாண் ஆற்றுப்படை


முது வேனிற் பருவம்
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,
யாழ்
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண் கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை;
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; 10
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை;
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்;
பொன் வார்ந்தன்ன புரி அடங்க நரம்பின் 15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ,
பாணனது வறுமை
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல, 20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
பெரு வறம் கூர்நத கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு,
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும்-
இளந்திரையனின் மாண்பு
நீயிரும்,
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30
திரை தரு மரபின், உரவோன் உம்பல்,
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்;
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!
நாட்டின் அறப் பண்பாடு
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45
உமணர் சகடம்
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் 50
உமண மகளிர் வண்டி ஓட்டுதல்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப
உமணரும் உப்புச் சகடமும்
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், 60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப,
சில் பத உணவின் கொள்ளை சாற்றி,
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி 65
வம்பலர்
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், 70
விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க,
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை,
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள்,
கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, 75
உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர்,
கழுதைச் சாத்து
தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் 80
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்
எயினர் குரம்பையின் தன்மை
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங் காய் புடை விரிந்தன்ன
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது, 85
யாற்று அறல் புரையும் வெரிநுடைக், கொழு மடல்,
வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர்,
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை
எயிற்றியர் செயல்
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் 90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல்
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி,
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறை தாள் விளவின் 95
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
எயிற்றியரின் விருந்தோம்பற் சிறப்பு
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100
வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால்,
செவ் வரை நாடன், சென்னியம் எனினே
தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர். 105
பன்றி வேட்டை
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி,
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் 110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
குறுமுயல் வேட்டை
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி,
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ, 115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ் சுரம் இறந்த அம்பர்
கொடுவில் எயினர் குறும்பு
பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் 120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்,
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்,
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; 125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை,
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, 130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்
வறை கால் யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்.
மறவனின் மாண்பு
யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், 135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,
வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை,
மறவர் செயல்
செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு, 140
நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி,
இல அடு கள் இன் தோப்பி பருகி,
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி,
மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்,
சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ, 145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை
கோவலர் குடியிருப்பு
மறிய
குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை,
செற்றை வாயில், செறி கழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், 150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில்,
கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எருப் படு வரைப்பின்,
கோவலர் மகளிரின் செயல்
நள் இருள் விடியல் புள் எழப் போகி 155
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல் மா மேனி, 160
சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கடடிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு பெறூஉம் 165
மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்.
இடையன் இயல்பு
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை, 170
உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல்,
மேம் பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன் 175
இடை மகனின் அக அழகு
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விரல் ஞெகிழிச்
செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின் 180
புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும், விரல் எறி, குறிஞ்சி,
பல்கால் பறவை கிளை செத்து, ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி
முல்லை நில சீறூர் மாண்பு
முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் 185
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்,
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்,
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பா மழை கடுப்பக் 190
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர்
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி,
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, 195
இன் சுவை மூரல் பெறுகுவிர்
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி,
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி, 200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின், இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால்
கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் 205
வன் புலம் இறந்த பின்றை
மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்
நாற்று நடுதல்
மென் தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன
கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய,
பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பில்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், 210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில்,
நெல் விளைதற் சிறப்பு
களைஞர் தந்த கணைக் கால் நெய்தல்
கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் 215
கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி,
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி
ஈருடை இருந் தலை ஆரச் சூடி,
பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் 220
புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்,
கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் 225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம்,
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி
நெல் அரிந்து கடா விடுதல்
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் 230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி,
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல், 235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி,
பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி, பைது அற,
குட காற்று எறிந்த குப்பை, வட பால் 240
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
உழவரின் இல்லச் சிறப்பு
பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள் நெடு மார்பின், 245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
உழவரின் மக்கட் சிறப்பு
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச் 250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்;
உழவர் விருந்தோம்பல் சிறப்பு
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்.
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை 260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்,
கொடுமுடி வலைஞர் குடிச்சிறப்பு
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,
தாழை முடித்து, தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில், 265
கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
வலைஞர் குடியில் பெறும் உணவு
அவையா அரிசி அம் களித் துழவை 275
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி,
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ, தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி,
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த, 280
வெந் நீர் அரியல் விரல் அலை, நறும் பிழி,
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்.
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, 285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, 290
சூடத் தகும் பூ
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை,
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் 295
பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்,
அந்தணர் இல்லத்தின் அமைதி
செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்,
பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்,
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் 300
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
அந்தணர் விருந்தோம்பும் சிறப்பு
பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்
சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல்,
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம், 305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறு முறி அளைஇ, பைந் துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர். 310
நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப்பட்டினம்
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென,
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த 315
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி
திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
பால்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, 325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
மகளிர் இயல்பு
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் 330
பீலி மஞ்ஞையின் இயலி, கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ,
கை புனை குறுந் தொடி தத்த, பைபய,
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் 335
பட்டின மருங்கின் அசையின்
பட்டினத்து மக்களின் உபசரிப்பு
முட்டு இல்,
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 340
ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப்
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல் மா வல்சி தீற்றி, பல் நாள்
குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக்
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர். 345
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண் பொர நிவந்த, வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் 350
துறை பிறக்கு ஒழியப் போகி
தண்டலை உழவர் தனிமனைச் சிறப்பு
கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த,
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை,
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் 355
தண்டலை உழவர் விருந்தோம்பற் சிறப்பு
தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360
தீம் பல் தாரம் முனையின், சேம்பின்
முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகற் பெயல்
ஆற்றினது இயல்பு
மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய்,
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் 365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து,
பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர்,
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் 370
நாடு பல கழிந்த பின்றை
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் 375
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப,
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் 380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு,
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், 385
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக் கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி;
பூமலி பெருந்துறை
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை,
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் 390
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்
கோபுர வாயிற் சிறப்பு
காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்,
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
காஞ்சி மாநகர் மாண்பு
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின், 405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத் துள்ளும் பலர் தொழ, 410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
இளந்திரையனின் போர் வெற்றி
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,
கச்சியோனே, கை வண் தோன்றல், 420
அரசனது முற்றச் சிறப்பு
நச்சிக் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளியஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட,
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், 425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை,
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் 430
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ,
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, 435
அரண்மனைச் சிறப்பு
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து
இறை உறை புறவின் செங் கால் சேவல்,
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் 440
இளந்திரையன் அரசிருக்கைச் சிறப்பு
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, 445
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி,
பாணன் அரசனைப் போற்றிய வகை
பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் 450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ! 455
செல்வர் செல்வ! செரு மேம் படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, 460
வந்தேன், பெரும! வாழிய நெடிது! என,
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி,
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
நின் நிலை தெரியா அளவை அந் நிலை
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க, 465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, 470
இரவலரை ஊட்டுதற் சிறப்பு
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங் கடித் தீம் சுவை அழுதொடு, பிறவும், 475
விருப்புடை மரபில் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
பரிசிற் சிறப்பு
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் 480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் 485
தொடை அமை மாலை விறலியர் மலைய;
பரிசில் தரும் தேர்ச் சிறப்பு
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில், நால்கு உடன் பூட்டி,
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து 490
பரிசில் நீட்டியாப் பண்புடைமை
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ,
அன்றே விடுக்கும் அவன் பரிசில், இன் சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
தொண்டைமான் இளந்திரையன்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. 500
தனிப் பாடல்
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூல் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சினவேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன் என்னும் செருக்கு.